flash

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழக DDE (B.Ed) படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. For More Detail click Here. அண்ணமலைப் பல்கலைக்கழக DDE தேர்வு முடிவுகள் .....Click Here
ஆசிரியர்கள் பொது மாறுதல் 24-06-2012 முதல் 29-06-2012.வரை நடைபெற உள்ளது.. ஆசிரியர்கள் பொது மாறுதல் கோரும் விண்ணப்பம் பெற .........Click Here

செவ்வாய், ஜனவரி 18, 2011

கைப்பேசி சந்தாதாரர்களின் கவனத்திற்கு
தங்கள் கைப்பேசி எண்களை மாற்றாமல் தங்களின் கைபேசி சேவை வழங்குபவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்
20-ஜனவரி 2011 முதல்
விதிமுறைகள்
1. மாற்றுவதற்குரிய கட்டணம் ரூ 19- மட்டுமே.
2. மாற்றுவதற்குரிய காலம் - 7 வேலை நாட்கள்(ஜம்மு & காஷ்மீர் , அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு சேவை பகுதியாக இருந்தால் 15 வேலை நாட்கள்)
3.நுகர்வோர்களின் விப்பத்திற்கேற்ப இந்திய தொலைதொடர்பு ஒழங்குமுறை ஆணையம் தெரிவிப்பதாவது சேவை துண்டிப்பு நேரம் 2 மணி நேரத்திற்கு மிகாது அதுவும் இரவு நேரத்தில் மட்டுமே.

நுகர்வோர் வழிகாட்டி

1. தங்கள் கைப்பேசி எண்களை மாற்ற விரும்பும் புதிய சேவை வழங்குபவரை அனுகவும்.
2. நுகர்வோர் இணைப்புப் படிவம் (CAF)& மாற்றுதல் (Porting) படிவத்தை பெறுங்கள்.
3. தகுதி மற்றும் பிற நிபந்தனைகளை கவனமாகப் படிக்கவும்.
4.தகுதியிருந்தால் நீங்கள் மாற்ற விரும்பும் கைப்பேசி எண்ணிலிருந்து 1900 என்ற எண்ணிற்கு PORT என தட்டச்சு செய்து ஒரு வெற்றிடம் விட்டு தாங்கள் மாற்ற விரும்பும் கைப்பேசியின் 10 இலக்க எண்களை தொடர்ந்து தட்டச்சு செய்த குறுஞ்செய்தியை(SMS) அனுப்புவதன் மூலம் யுனிக் போர்டிங் கோட் பெற்றிடுங்கள்.
5. நுகர்வோர் இணைப்புப் படிவம் (CAF)& மாற்றுதல் (Porting) படிவத்தை நிரப்பவும்.
6. முறையாக நிரப்பப்பட்ட  படிவத்துடன் தேவையான ஆவண சான்றுகளை இணைத்து சேவை வழங்குபவரிடம் சமர்ப்பிக்கவும்.
7. நீங்கள் போஸ்ட்- பெய்டு சந்தாதாரராக இருந்தால்,படிவத்துடன் சேர்த்து கடைசியாக தங்கள் செலுத்திய பில் நகல் ஒன்றினையும் சமர்ப்பிக்கவும்.
8. புதிய சேவை வழங்குபவரிடமிந்து புதிய சிம் ஒன்றினைப் பெறுங்கள்.
.......விண்ணப்பித்த 24 மணிநேரத்திற்குள் தங்கள் மாற்றுதல் விண்ணப்பத்தினை திரும்பப் பெறலாம்....
9. தங்கள் புதிய சேவை வழங்குபவர் தங்கள் கைபேசியில் தொடர்பு கொண்டு சேவையை மாற்றும் நாள் மற்றும் நேரத்தை தங்களுக்கு தொரியப்படுத்துவார்.
10. பழைய சிம் கார்டை நீக்கி தங்கள் புதிய சிம் கார்டை குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்திற்கு பின்பு மாற்றிக்கொள்ளவும்.

நிபந்தனைகள்:

1. தாங்கள் தங்கள் கைப்பேசி இணைப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து அல்லது சேவையை மாற்றிய நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகே சேவை மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள்.
2.தாங்கள் தங்கள் கைபேசி சேவை இருக்கும் பகுதிக்குள்ளாகவே மட்டும் சேவை வழங்குபவரை மாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவீர்கள்.
3.  நீங்கள் போஸ்ட்- பெய்டு சந்தாதாரராக இருந்தால் கடைசி பில்லின் படி மற்றும் அனைத்து நிலவைகளையும் செலுத்தியதை உறுதி செய்யவும்.
4.  நீங்கள் ப்ரீ- பெய்டு சந்தாதாரராக இருந்தால், உங்கள் இருப்புத் தொகை சேவை மாற்றும் நேரத்தில் காலாவதியாகி விடும்.
.....முழுமையான ஒழுங்குமுறை விதிகளுக்கு தயவு செய்து இங்கே கிளிக் செய்யவும்.....

Blogger Widgets
Back to TOP Testf